Sri Sharada Sharannavaratri Mahotsava 2026
Learn moreLoading...

The Administrator,
Sringeri Math and its Properties,
Sringeri, Chikkamagaluru District,
Karnataka - 577139
Location
© 2026. All rights reserved by Dakshinamnaya Sri Sharada Peetham, Sringeri

Tamil Nadu
Sringeri Sri Shankara Math
Bypass Rd, Vanamamalai Nagar,
Durai Samy Nagar, Ponmeni,
Madurai,
Tamil Nadu - 625016

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடமும், மதுரை மாநகரமும்
தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் ஒரு தெய்வீகத் தொடர்பு
மதுரைக்கும் சிருங்கேரி ஸ்ரீ மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. அவர் மதுரைக்கு விஜயம் செய்து அம்பாளை தர்சனம் செய்து "மீனாக்ஷி பஞ்சரத்தினம்" "மீனாக்ஷி அஷ்டகம்" "மீனாக்ஷி நவரத்தின மாலை" என்ற துதிகளை அம்பாள் மேல் இயற்றியதும் யாவரும் அறிந்ததே.
ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்யர் :
கிபி 1228 முதல் 1333 வரை சிருங்கேரி ஸ்ரீ பீடத்தில் அருளாட்சி புரிந்த ஜகத்குரு ஸ்ரீ வித்யா தீர்த்தர் அவர்கள் மதுரைக்கு விஜயம் செய்துள்ளார். அவருடைய சீடர்களாகிய ஹரிஹரரும் புக்கரும் ஸ்ரீ வித்யாரண்ய குருவின் கடாக்ஷத்தையே துணையாகக் கொண்டு பகைவர்களை வென்று விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.
1324ம் ஆண்டிலிருந்து மதுரை அன்னியர்கள் ஆட்சியில் இருந்ததனால். கோவிலில் பூஜை நின்றுவிட்டது. சுவர் எடுத்து மீனாக்ஷி மற்றும் சோமசுந்தரரின் சந்நிதிகள் அடைக்கப்பட்டது. மீனாக்ஷியின் உத்ஸவமூர்த்தி மானாமதுரைக்கு கொண்டு போகப்பட்டது. விஜயநகரப் பேரரசன் புக்கரின் மைந்தன் குமாரகம்பணன் காஞ்சியைக் கைப்பற்றியதும் அவனுடைய கனவில் மீனாக்ஷி காட்சி அளித்து மதுரையை விடுவிக்கும்படி கட்டளையிட்டாள். கம்பணன் மற்றும் வீரசாவணன் முதலியோர் 1371ம் ஆண்டில் அப்போது ஆண்ட ஹாஸன் கங்கு (அல்லாவுதீன் பஹமன் ஷா) என்ற பாஹ்மனி சுல்தான் மொகலாய மன்னனை ஜெயித்து மதுரை ஆலயங்களில் பூஜையை துவக்கினார்கள்.
இதற்கு காரணமானவர்கள் அப்போதைய சிருங்கேரி ஜகத்குருக்கள் ஸ்ரீ பாரதீ தீர்த்தர் மற்றும் ஸ்ரீ வித்யாரண்யர் ஆகியோர்களே. கோவிலை மறுபடியும் நிர்மாணம் செய்யும் பணியை முதல் நாயக்க மன்னர் விஸ்வநாத நாயக்கரும் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரும் பல பாகங்களை கட்டி முடித்து ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டி முடித்தார்கள்.
ஜகத்குரு ஸ்ரீ அபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள்:
கிபி 1600 முதல் 1623 வரை பீடாதிபதியாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் மதுரை வத்தலகுண்டு அருகிலுள்ள பரனீ என்ற ஊரைச் சேர்ந்தவர். ஸ்வாமிகள். இவர் காலத்தில் மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கர் (1611-1615) ஸ்ரீ ஸ்வாமிகளின் கருத்துப்படி கம்பத்தடி மண்டபமும் வசந்த மண்டபமும் கட்டி முடித்தார். விஜய நகர அரசர் வீர வசந்தராயர் என்றழைகப்பட்ட சதாசிவ ராயர் பெயர்தான் இம்மண்டபத்திற்கு சூட்டப்படுள்ளது. ஸ்ரீசுவாமிகள் சுந்தரேஸ்வரருக்கு ஒரு தங்க ரதமும் ஸமர்ப்பணம் செய்திருக்கிறார். இதே செய்தியை ஸ்ரீ ராஜா வல்லப சாஸ்திரிகள் தாம் எழுதிய ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ விஜயம் எனும் காவ்யத்தின் சுலோகத்தில் கூறுகிறார்.
சௌந்தரேச மஹேஸ்ய ரதம் ஹேம விநிர்மிதம்/
யம் ஸமர்பிதவான் வீரோ முத்துவீரப்பநாயக://
ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த பாரதீ மஹாஸ்வாமிகள்:
இவருக்கு அடுத்து சிருங்கேரி பீடத்தில் 1623 முதல் 1663 வரை 25வது பீடாதிபதியாக அருள் பாலித்த ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த பாரதீ மஹாஸ்வாமிகள் மதுரை பிராந்தியத்தில் உள்ள குன்றுவாரங்கோட்டையைச் சேர்ந்தவர். ஜகத்குரு மஹாஸ்வாமிகள், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மற்றும் அவரது அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதர் ஆகியோரின் சமகாலத்தவர். இவர் மீனாக்ஷி அம்மன் பேரில் மீனாக்ஷி சதகம், மீனாக்ஷி அஷ்டகம் முதலிய பாக்களை இயற்றியுள்ளார்கள். இந்த கால கட்டத்தில் தான் மதுரையில் புது மண்டபமும், அம்மன் சந்நிதி தெருவிலுள்ள சிருங்கேரி மடமும் கட்டப்பட்டது என்றும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இந்த கட்டிடத்தில் தங்கியிருந்த போதுதான் மீனாக்ஷி அம்பாள் பெயரில் 'ஆனந்த சாகரஸ்தவம்' என்ற அற்புத நூலை இயற்றினார்.
ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள்
சிருங்கேரியில் 32வது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளும் 33வது ஆச்சாரியரான ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளும் 1872ல் (தமிழ் ஆங்கீரஸ வருடம்) மதுரைக்கு விஜயம் செய்தார்கள். ஆங்கீரஸ வருடம் ஆடி மாதம் 5ம் தேதி குருவாரத்தில் இரண்டு ஆச்சாரியர்களும் மீனாக்ஷி சுந்தரேஸ்வராளை தரிசனம் செய்து தமது திருக்கரங்களாலேயே பூஜை செய்து ஆனந்தித்தார்கள். மேலும் சாதுர்மாஸ்யம், நவராத்திரி ஆகியவைகள் இங்கு நடத்தப் பட்டன.
கோவில் பட்டர்கள் மற்றும் மதுரை மஹாஜனங்கள், சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ஸ்ரீ எஸ். சுப்ரமணிய அய்யர் தலைமையில் ஒரு குழுவாக ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளும் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளும் தமது ராமேஸ்வரம் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் மேலூரில் முகாமிட்டிருந்த போது பிரார்த்தித்ததன் பேரில் 1874ல் மதுரைக்கு திரும்பவும் விஜயம் செய்தார்கள். ஸ்ரீ ஈஸ்வர சிரௌதிகள் எனும் வேத பண்டிதர் மதுரையில் சிருங்கேரி ஸ்ரீ மடத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
நமது ஸனாதன் மதத்தின் அடிப்படையான வேதம் சாஸ்திரம் முதலியவற்றை வளர்த்து வருவது ஸ்ரீ மடத்தின் கைங்கர்யமாகும் அதே போல் மதுரையில் உள்ள ஸ்ரீ மடத்தில் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் தங்க வைத்து வேதம் முதலியன கற்பிக்க ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் 1874ல் உத்தரவு அளித்த கடிதமும் உள்ளது.
இதில் நமக்கு தெரிய வருவது என்னவென்றால் நமது கலாசார மற்றும் பரம்பரை தர்மங்கள் குறைபடும்போது சிருங்கேரி மடம் அதை காப்பாற்றுவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பது தான். அது மாத்திரமல்ல. மதுரை ஸ்ரீ மடத்தில் பாடசாலை நடத்துவதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தும் வரை ஸ்ரீ மீனாக்ஷி ஆலயத்தில் வைத்து பாடசாலை நடத்தப்பட்டு வந்த விவரம் தெரிய வருகிறது. இதில் காணப்படும் தவத்தாறேந்தல் என்கிற கிராமம் திருப்புவனம் அருகில் இருக்கிறது. இன்னும் ஸ்ரீ மடத்தின் சொத்தாகவே உள்ளது. அங்கு ஸ்ரீ விநாயகர் ஆலயம் ஒன்றும் ஸ்ரீ மடத்தால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரையில் ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு அதில் அதிக அளவு மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் பரம்பரை படிப்பு மற்றும் ஹிந்து மத நூல்களில் அறியாமை முதலியன அதிகரித்தன. அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் அடிப்படை தர்ம நெறிகளை போதிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் மதுரை நேடிவ் பாடசாலையில் (தற்சமயம் மதுரை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள எம். சி. மேல்நிலைப் பள்ளி) இதற்கெனவே ஒரு ஆசிரியரை நியமனம் செய்தும் அவருக்கு ஸ்ரீ மடத்திலிருந்தே மாதம் 20 ரூபாய் சம்பளம் அளிக்கவும் தீர்மானம் செய்தும் மதுரை பிரமுகர்களுக்கு (1894ல்) மன்மத வருஷம் கடிதம் எழுதி உள்ளார்.
பனாரஸ் ஹிந்து கலாசாலை:
இந்த விஜயத்தில் ஸ்ரீ ஆச்சாரியாள் மதுரைக்கருகிலிருக்கும் சோழவந்தான் கிராமத்தில் தங்கியிருந்த போது பண்டிட் மதன் மோஹன் மாளவியா தமது உதவியாளர் தத்தாத்ரேய கிருக்ஷ்ண தாம்லேயுடன் வந்து தரிசித்தார்கள். இதற்கு சில மாதங்களுக்கு முன் வாரணாசியில் தம்மால் நிறுவப்படவுள்ள பனாரஸ் ஹிந்து கலாசாலையை ஸ்ரீ ஜகத்குருக்கள் வந்து துவக்கி வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீ ஜகத்குருக்களும் தூரத்தையும், காலத்தையும் கருதி, தம்மால் வர இயலாமையை தெரிவித்து தமது குருநாதர் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய பாதுகைகளை தந்து அதன் முன்னிலையில் வாரணாசியில் கலாசாலையை துவக்கும்படி பணித்திருந்தார்கள். ஸ்ரீ ஆசார்யாளின் அனுக்ரஹத்தால் அவ்விழா நன்றாக நடந்தது என தரிசனம் செய்து தெரிவித்தார்கள்.
ஸ்ரீ ராஜவல்லப ஸாஸ்திரிகளின் "ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ விஜயம்" என்ற மஹா காவியத்தில் கீழ்கண்டவாறு காணப்படுகிறது.
ப்ராயாகோ மாலவீயோஅத பண்டிதோ மதனாபித:/
பாடசாலாதி வ்ருத்தாந்தம் தம் குரும் ஸமவேதயத்//
பூர்வ பாகம் சர்கம் 8 ஸ்லோகம் 58)
ஸ்ரீ பாரத தர்ம மஹாமண்டலி:
மதுரையில் ஸ்ரீ பாரத தர்ம மஹாமண்டலி என்ற ஒரு அமைப்பு இருந்தது. ஸநாதன தர்மத்தில் மக்களின் ஈடுபாடு குறைவது சம்பந்தமாகவும் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசிக்க பிரமுகர்களின் மஹாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதன் நிர்வாகிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளுக்கு அதை தெரிவித்து ஆலோசனையும் ஆசீர்வாதமும் வேண்டினார்கள். ஸ்ரீ ஜகத்குரு அவர்கள் அந்த நிர்வாகிகளுக்கு ஆசீர்வதித்து சுபகிருது வருஷத்தில் (1902ல்) எழுதிய கடிதத்தில்:
கலியுகத்தில் 'ஸங்கே பக்தி: கலௌ யுகே' என்று கூற்றுப்படி ஒற்றுமையே வெற்றிக்கு வழி வகுக்கும் என்றும் நீங்கள் எல்லோரும் இந்த வழிப்படி ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தி நமது புராதன கலாசாரத்தை நிலைநாட்டும் முயற்சியில் வெற்றி அடைய வேண்டுமென்று ஜகன்மாதா சாரதாம்பாளையும் ஜகத்குரு சங்கர பகவத்பாதரையும் ஆயிரம் நமஸ்காரங்களுடன் வேண்டிக்கொண்டு சாரதா சந்திரமௌளீஸ்வர பிரசாதமும் பொருளும் அனுப்பியுள்ளதாகவும் எழுதியுள்ளார்கள்.
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்:
ஜீவன்முக்தராகத் திகழ்ந்து, 1912 முதல் 1954 வரை 34வது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் 1925ல் மதுரை நகருக்கு விஜயம் செய்து அம்பாளை தர்சனம் செய்து அம்மன் பேரில் பாக்களை இயற்றியுள்ளார்கள். அப்போது திருக்கோவில் ஆடி வீதியை அடைத்து பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு அன்னதானம் செய்யப்பட்டது. அம்பாளைப் பார்த்ததும் ஆனந்தத்தால் உந்தப்பட்டு "அத்ராக்ஷம் பஹுபாக்யத:" (மிகுந்த பாக்ய வசத்தால் கண்டேன்) என்று துதித்து ஆனந்தப்பட்டார்கள். ஸ்ரீ ஸ்வாமிகள் மீனாக்ஷி தேவியை தமது குருநாதர் ரூபத்தில் தரிசித்தார்கள். "த்வத் ரூப தேசிகவரை: ஸததம் விபாவ்யம் சித்ரூபமாதி நிதனாந்தரஹீகமம்ப" என்று மீனாக்ஷி தேவிக்கும் நமது குருநாதருக்கும் வித்தியாசம் இல்லை என்று துதிக்கிறார்.
ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் மதுரையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கன. ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் சந்திரமௌளீஸ்வர பூஜை தீர்த்தப் பிரசாதம் அளித்தும் அருளை வழங்கி வந்தார்கள். அப்போது ஒரு பெண் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு தீர்த்தம் வாங்க வந்தாள். ஸ்ரீ ஸ்வாமிகள் தீர்த்தம் அளிக்காமல் அந்த அம்மாவை பக்கவாட்டில் ஒதுங்கி நிற்கும்படி பணித்தார்கள். பின்னால் வருபவர்களுக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டு வந்த போது வேறு ஒரு பெண் வந்தவுடன் அவளிடம் "கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். அவள் சும்மாயிருக்கவே மறுபடியும் "நகையை கொடுத்து விடுங்கள்" என்றார்கள். அவளும் தான் மறைத்துவைத்திருந்த ஒரு தங்க சங்கிலியை எடுத்து ஸ்ரீ ஸ்வாமிகள் முன்னிலையில் வைத்தாள். பக்கவாட்டில் நின்று கொண்டிருக்கும் முதல் பெண்மணியைக் கூப்பிட்டு நகையை எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார்கள். பிறகு அந்த பெண்மணியைக் கூப்பிட்டு "வீட்டில் கணவருக்கு தேவையானவற்றை செய்து விட்டு இங்கு வரவும்" என்று அறிவுரை கூறி அனுப்பினார்கள். பிற்பாடு விசாரித்த போது தான் அந்த அம்மாள் தனது குழந்தையின் சங்கிலி காணாமல் போய்விட்டது என்று தேடிப் பார்த்து கிடைக்காமல் அழுது கொண்டே தீர்த்தம் வாங்க வந்ததும் 2வதாக வந்த பெண்மணி அதை திருடியிருந்ததும் தெரிய வந்தது. முதல் பெண்மணி ஸ்ரீ ஸ்வாமிகளிடம் இந்த விஷயத்தை தெரிவிக்காமல் இருந்த போதே தமது ஞான திருஷ்டியால் 2வது பெண் எடுத்ததை கண்டு பிடித்து முதல் பெண்மணியிடம் அளித்தார். மேலும் முதல் பெண்மணி ஸ்ரீ ஸ்வாமிகளை தரிசனம் செய்து தீர்த்தம் வாங்க நேரமாயிற்று என்று தனது கணவருக்கு தேவையானவற்றை வீட்டில் செய்து கொடுக்காமல் வந்தது அதற்காகத்தான் ஸ்ரீ ஸ்வாமிகள் அவளிடம் "வீட்டிற்கு கணவருக்கு தேவையானவற்றை செய்துவிட்டு இங்கு வரவும்" என்று அறிவுரை கூறியதும் தெரிய வந்தது.
ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்:
பீடாதிபதியாக அருளாட்சி புரிந்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் 1958, 1965, 1969, 1975, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரைக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அம்மன் சந்நிதி தெரு ஸ்ரீ மடத்தில் தங்கி கல்யாண மண்டபத்தில் பூஜை செய்தும் தீர்த்தப் பிரசாதம் அருளியும் வந்திருக்கிறார்கள்.
1958ல் வைகை நதிக்கரையிலிருந்த ஸ்ரீ ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலை கட்டிடத்தில் ஸ்ரீ சங்கர ஜயந்தீ உத்சவம் மிகவும் விமரிசையாக நடத்தினார்கள். ஸ்ரீ ஆதிசங்கரரின் திவ்ய மூர்த்திக்கு கனகாபிஷேகம் முதலியன நடத்தி சிறப்பான பூஜை நடந்தது. சங்கர ஜயந்தீ தினத்தில் ஸ்ரீ சங்கரரின் மூர்த்தியை பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி ஊர்வலம் நடந்தது. அப்போது ஸ்ரீ ஆச்சாரியாள் சங்கரரை பார்த்துக்கொண்டே பின்புறமாக நடந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மேலும் வித்வத் ஸதஸ் ஒன்று நடத்தப்பட்டது. மதுரை பிராந்தியம் மட்டுமின்றி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அவ்வமயம் துவரிமான் லக்ஷ்மண அய்யங்கார் என்ற வைஷ்ணவ அறிஞர் "பசுபதி" என்ற தலைப்பில் வாக்யார்த்தம் சொல்லி ஸ்ரீ ஜகத்குருவின் விசேஷ அனுக்ரஹத்திற்கு பாத்திரமானார் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றும் ஒரு குறிப்பிடும்படியானவர் வித்வான் காலடி ஸ்ரீ சுப்ரமணிய ஸாஸ்திரிகள். இவர் பிற்காலத்தில் காஞ்சி உபநிஷத் பிரம்மேந்திர மடத்தின் பொறுப்பை ஏற்றார்.
ஸ்ரீ ஜகத்குரு அவர்கள் 1965 விஜயத்தின் போது இங்கு சிவராத்திரியை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். 1975ல் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹா ஸ்வாமிகள் தற்போதைய ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளுடன் விஜயம் செய்தார்கள்.
1963ம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கும்பாபிஷேகத்திற்கு ஸ்ரீ ஆசார்யாளிடம் பெறப்பட்ட ஆசீர்வாதச் செய்தியினை தனியாகக் காணலாம்.
ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்:
தற்போதைய ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் 1987 சாதுர்மாஸ்யம், நவராத்திரி உத்சவங்களை நடத்தி அனுக்ரஹித்துள்ளார்கள். இந்த விஜயத்தின் போது மழையின்மையால் கொடிய தண்ணீர் தட்டுப்பாட்டினால் மதுரை மக்கள் மிக்க சிரமப்பட்டார்கள். ஸ்ரீ ஆச்சாரியாள் உடனே கூடலூர் கிருக்ஷ்ண ஸாஸ்திரிகளை மஹாபாரதத்திலுள்ள விராடபர்வத்தை பாராயணம் செய்யும்படி கூறி அந்த முறையையும் அவருக்கு கூறினார்கள். எங்கிருந்தோ மேகங்கள் கூடி சரியான மழை பெய்து மதுரை தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியது.
மேலும் ஜகத்குருவின் அருளுரைகளைக் கேட்ட பலரும் தர்ம மார்கத்தில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அவர்கள் மீனாக்ஷிகோவிலின் கல்யாணமண்டபத்திலேயே வ்யாஸ பூஜை முதல் உமாமஹேச்வர விரதம் வரை பல்வேறு விரத அனுஷ்டானங்கள் செய்து பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினார்கள். அதேசமயத்தில் புகழ்பெற்ற மஹாகணபதி வாக்யார்த்த வித்வத் ஸபா நிகழ்த்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பண்டிதர்கள் ஸமஸ்க்ருத மொழியிலேயே நடக்கும் இச்சபையில் பங்கேற்று ஜகத்குரு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நவராத்திரி உத்ஸவத்தை சிறப்பாக நிகழ்த்தி பக்தர்களை சாரதாம்பாளின் அருளுக்கு பாத்திரமாக்கினார்கள்.
1992ல் மறுபடியும் விஜயம் செய்து 26.1.1992ல் பைபாஸ் சாலை ஸ்ரீ மட வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். 1998ல் அந்த வளாகத்தில் நற்காரியங்கள் நடைபெறுவதற்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸபா மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 31.5.2002ல் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ சாரதாம்பாள் ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு 2012ல் மே 21 முதல் மே 31 முடிய மதுரையில் தங்கி அனுக்ரஹித்தார்கள். பைபாஸ் சாலை ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சாதாம்பாளுக்கு ஸ்ரீ சாரதா அஷ்டோத்தரம் பொறிக்கப்பட்ட தங்க காசுமாலையையும் வெள்ளி மண்டபமும் சமர்ப்பணம் செய்து விசேஷ பூஜை செய்து ஆனந்தப்பட்டார்கள். அம்மன் சந்நிதி தெருவிலுள்ள புராதன ஸ்ரீ மடமும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு 30.5.2012ல் ஸ்ரீ ஜகத்குருவின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. 2017ம் ஆண்டு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் தமது சீடர் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் அவர்களுடன் விஜயம் செய்து மதுரையம்பதியினை அனுக்ரஹித்தார்கள். அச்சமயத்தில் ஜகத்குரு அவர்களின் வர்தந்தி மஹோத்ஸவம் என்ற ஜன்
சிருங்கேரி ஜகத்குருமார்கள் மதுரை விஜயம் செய்யும்போது மதுரையில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் சிருங்கேரி ஜகத்குருக்கள் மதுரைக்கு விஜயம் செய்த போது ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கர்பகிரஹத்தின் உள்ளே சென்று தங்களுடைய திருக்கரங்களாலேயே பூஜை செய்திருக்கிறார்கள். இது மதுரை மக்களின் நன்றியுணர்வை பறை சாற்றுகின்றது. ஏனெனில் இன்று நாம் ஸ்ரீ மீனாக்ஷி அம்பாளை தரிசனம் செய்து மகிழ்கிறோம் என்றால் அதற்கு சிருங்கேரி ஜகத்குரு பீடத்தின் குரு பரம்பரையில் வந்த ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளால் நிறுவப்பட்ட விஜயநகர பேரரசு தான் முக்கிய காரணம். தற்போது நாம் கண்டு பரவசமடையும் ஸ்ரீ ஆச்சாரியாள் தினசரி நிகழ்த்தும் ஸ்ரீ சந்த்ர மௌலீஸ்வர பூஜையில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் விக்ரஹமும் ஆராதிக்கப்படுகின்றன என்பதன் மூலம் ஸ்ரீ சாரதா பீடத்திற்கும் மதுரையம்பதிக்கும் உள்ள சம்பந்தம் காலம்கடந்த தெய்வீகமான ஒன்று என்பது விளங்கும்.
தொகுப்பு: குருவடிப்பொடி எஸ்.சங்கர நாராயணன், மதுரை
The city of Madurai and the Dakshinamnaya Sringeri Sharada Peetham have shared a sacred bond since the time of Jagadguru Adi Shankara Bhagavatpadacharya Himself. It is well known that Sri Adi Shankara journeyed to Madurai, had darshan of Mother Meenakshi, and composed the hymns "Meenakshi Pancharatnam," "Meenakshi Ashtakam," and "Meenakshi Navaratna Malai" in Her praise.
In the centuries since, this sacred bond has been carried forward and deepened through the repeated visits, blessings, and guidance of successive Jagadguru Shankaracharyas of the Sringeri Guru Parampara.
Jagadguru Sri Vidya Tirtha Mahaswamiji, the 10th Sringeri Jagadguru, who adorned the Sringeri Sharada Peetham from 1228 to 1333 CE, has visited Madurai. His disciples, Harihara and Bukka, carrying with them only the grace and blessings of Jagadguru Sri Sri Vidyaranya as their strength, vanquished their foes and established the Vijayanagara Empire. Madurai had fallen under foreign rule in 1324 CE, and temple worship had ceased. It was the Vijayanagara Empire, guided by Jagadguru Sri Bharati Tirtha Mahaswamiji and Jagadguru Sri Vidyaranya Mahaswamiji, that would later restore worship in the temples of Madurai.
Jagadguru Sri Abhinava Narasimha Bharati Mahaswamiji (1600–1623 period), a native of the Madurai region, guided construction of temple mandapams and offered a golden chariot to Sri Sundareshwara, as recorded by Sri Raja Vallabha Sastrigal in a verse of his epic poem, "Sri Sacchidananda Shivabhinava Narasimha Bharati Vijayam".
Jagadguru Sri Sacchidananda Bharati Mahaswamiji, the 25th Pontiff of the Sringeri Sharada Peetham, who hailed from Kundrukarankottai in the Madurai region, composed the "Meenakshi Sathakam," "Meenakshi Ashtakam," and other hymns in praise of Meenakshi Amman. During this period, the Puthu Mandapam in Madurai, and the Sringeri Math on Amman Sannidhi Street, were built.
The 32nd and 33rd Sringeri Jagadgurus, Jagadguru Sri Vriddha Nrisimha Bharati Mahaswamiji and Jagadguru Sri Sacchidananda Shivabhinava Nrisimha Bharati Mahaswamiji, journeyed to Madurai in 1872 CE, and performed worship with Their own sacred hands. The Chaturmasya Vrata and Navaratri were also observed there during that time. They journeyed once more to Madurai in 1874.
The great Jivanmukta, Jagadguru Sri Chandrasekhara Bharati Mahaswamiji, the 34th Jagadguru of the Sringeri Sharada Peetham journeyed to the city of Madurai in 1925, had darshan of the Mother Goddess, and composed hymns in Her praise. The Jagadguru perceived in Goddess Meenakshi the very form of His own Guru, declaring: "Tvat Rupa Deshikavarai: Satatam Vibhavyam Chidroopamadi Nidhanantarahikamamba", that there is no difference between Mother Meenakshi and one's own Guru. During this time, the Jagadguru famously identified a theft of a child's gold chain through divine insight, restoring it to its rightful owner.
Jagadguru Sri Abhinava Vidyatirtha Mahaswamiji, the 35th Jagadguru of the Sringeri Sharada Peetham, visited Madurai many times between 1958–1980, notably conducting a grand Shankara Jayanti in 1958 with scholarly gatherings. A blessed message was received at Madurai from the Acharya on the occasion of the Sri Meenakshi Amman Kumbhabhishekam held in the year 1963. In 1975, He travelled to Madurai with the present Jagadguru Shankaracharya, Sri Bharati Tirtha Mahaswamiji.
Jagadguru Shakaracharya Sri Sri Bharati Tirtha Mahaswamiji graciously conducted the Chaturmasya and Navaratri festivities of 1987 at Madurai. During this visit, the people of Madurai had been suffering greatly due to a severe water shortage caused by lack of rain. The Jagadguru immediately instructed Kudalur Krishna Sastrigal to recite the Virata Parva from the Mahabharata, and guided him on the proper method for doing so. Clouds gathered from nowhere, proper rain fell, and Madurai's water shortage was relieved.
Further, many who heard the Jagadguru's gracious discourses enthusiastically took up the path of Dharma and thereby elevated their lives. The Jagadguru Mahaswamiji performed numerous Vrata observances, such as Vyasa Puja, Uma Maheshwara Vratam and others within the Kalyana Mandapam of the Meenakshi temple itself, bestowing abundant grace upon devotees.
During this same period, the renowned Mahaganapati Vakyartha Vidwat Sabha was conducted. The event, conducted entirely in Sanskrit, was attended by scholars from various parts of the country, and received the Jagadguru's blessings.
The Navaratri festival was conducted magnificently at Sethupathi High School, and devotees became recipients of Sharadamba's grace.
In 1992, the Jagadguru undertook another Vijaya Yatra to Madurai and laid the foundation stone for the Sri Math complex on Bypass Road. In 1998, the Sri Abhinava Vidyatheertha Sabha Mandapam was opened within that complex for the conduct of auspicious activities. Following this, on 31.5.2002, the shrines of Sri Vinayaka, Sri Adi Shankara, and Sri Sharadamba were consecrated, and the Kumbhabhishekam was performed.
Twenty-one years later, Jagadguru Sri Bharati Tirtha Mahaswamiji stayed in Madurai from May 21 to May 31, 2012, and bestowed His grace. At the Bypass Road Sri Matham, a golden coin-garland inscribed with the Sri Sharada Ashtottaram and a silver mandapam were offered to Sri Sharadamba, with special worship performed in great joy. The ancient Sri Matha on Amman Sannidhi Street was also renovated and restored, and its Kumbhabhishekam was conducted by the sacred hands of Sri Jagadguru on 30.5.2012. In 2017, Sri Mahasannidhanam, Jagadguru Sri Sri Bharati Tirtha Mahaswamiji visited along with His successor-designate, Sri Sannidhanam, Jagadguru Sri Sri Vidhushekhara Bharathi Mahaswamiji and blessed the city of Madurai. During that occasion, the Vardhanti Mahotsavam of Sri Mahasannidhanam was celebrated at Madurai itself, where the Jagadguru gave Ahnika Darshan to devotees in the morning.
It has been a longstanding tradition for the Jagadgurus of Sringeri to be accorded grand receptions whenever They visit Madurai. Furthermore, on visits to Madurai, the Sringeri Jagadgurus have entered the Garbha Griha (inner sanctum) of Sri Meenakshi Amman’s Sannidhi and performed worship with Their own sacred hands. This proclaims the gratitude of the people of Madurai towards the Sringeri Jagadgurus, for if devotees rejoice in the darshan of Sri Meenakshi Amba today, the principal reason is the Vijayanagara Empire, founded by Jagadguru Sri Vidyaranya Mahaswamiji of the Guru Parampara of the Dakshinamnaya Sringeri Sharada Peetham.